• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கீதா ஜீவன் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு!

  • Share on

தூத்துக்குடியில் கீதா ஜீவன் தேர்தல் பரப்புரைக்காக செல்லும் இடங்களில் எல்லாம், மக்கள் அவருக்கு அமோக வரவேற்பளித்து வருகின்றனர்.


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல்முனை போட்டி நிலவுவதால், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வேட்பாளர்கள் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மக்கள் வாழும் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்த வகையில், தூத்துக்குடி தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் தீவிர தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று ( 9 ஏப்ரல்,2026 தூத்துக்குடி மாநகராட்சி 7,8,9 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட, லூர்தம்மாள் புரம், மேட்டுப்பட்டி, பூபால்ராயர்புரம், சாமுவேல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கீதா ஜீவன், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஐந்தாண்டு காலம் நல்லாட்சி நடைபெற்றுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் நிறைவேற்றித் தரப்பட்டுள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கீதா ஜீவன் செல்லும் இடங்களில் எல்லாம், மக்கள் அவருக்கு அமோக வரவேற்பளித்தனர். இந்த நிகழ்ச்சியில், கம்யூனிஸ்ட், தேமுதிக, மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். 

  • Share on

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் விறுவிறுப்பு!

கடலோர மக்களின் குரலாய் எப்போதும் ஒலிப்பது அதிமுக... சி.த.செல்லப்பாண்டியன் நம்பிக்கை!

  • Share on