• vilasalnews@gmail.com

வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கு : ஒருவர் கைது... யார் அவர்?

  • Share on

விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 10ஆம் தேதி காணாமல் போன நிலையில், அடுத்த நாள் 11ஆம் தேதி பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கில் இன்றுடன் 9 நாட்களாகியும் குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்காத நிலையில், மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர். காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பலரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.


குறிப்பாக, சந்தேகிக்கப்படுபவர்களில் சிலருக்கு டிஎன்ஏ பரிசோதனையும், அந்த கிராமத்தில் வீடு வீடாக சோதனை மேற்கொண்டும் வந்தனர். இந்த நிலையில், சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், குற்றம் நடந்தது எப்படி? உள்ளிட்ட விவரங்களை போலீசார் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share on

புதிய தலைவர் தேர்வு : மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள் வாழ்த்து!

தூத்துக்குடி : வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் கைதான நபர் குறித்த பகீர் பின்னணி!

  • Share on