• vilasalnews@gmail.com

ஏப்ரல் 6 முதல் தூத்துக்குடிக்கு புதிய விரைவு ரயில் சேவை துவக்கம்

  • Share on

தென் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, காச்சிகுடா – தூத்துக்குடி இடையே புதிய வாராந்திர விரைவு ரயில் சேவை வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.


தற்போது காச்சிகுடா மற்றும் மதுரை இடையே சிறப்பு ரயிலாக (வண்டி எண்: 07191/07192) இயக்கப்பட்டு வரும் சேவையானது, இனி நிரந்தர ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டு, காச்சிகுடா – தூத்துக்குடி விரைவு ரயில் என்ற பெயரில் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


இந்த ரயில் சேவையானது வாரத்திற்கு ஒருமுறை காச்சிகுடா - தூத்துக்குடி,  ஏப்ரல் 6, 2026 (திங்கட்கிழமை) முதல் தனது பயணத்தைத் தொடங்குகிறது. காச்சிகுடாவில் திங்கள் மதியம் 03.00 மணிக்குப் புறப்பட்டு, செவ்வாய் இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.


தூத்துக்குடி - காச்சிகுடா, ஏப்ரல் 8, 2026 (புதன்கிழமை) முதல் தூத்துக்குடியில் இருந்து காலை 07.40 மணிக்குப் புறப்பட்டு, வியாழன் மதியம் 01.25 மணிக்கு காச்சிகுடாவை அடையும்.


பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் முக்கிய ஆன்மீக மற்றும் வணிக நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது, வேலூர் கண்டோன்மென்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போர்ட், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல்,  மதுரை, விருதுநகர், சாத்தூர் , கோவில்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 


இந்த புதிய ரயில் நீட்டிப்பு மற்றும் நிரந்தர சேவை அறிவிப்பால், தென் தமிழக மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும், நேரடி போக்குவரத்து வசதிக்கும் பெரும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on

கோவில்பட்டிக்கு குறிவைத்த வைகோ... இதான் அதற்கான பின்னணி!

தூத்துக்குடி மாணவி படுகொலை விவகாரம்... திசை மாறும் போராட்டம்!

  • Share on