• vilasalnews@gmail.com

தூத்துக்குடி : கதவைத் திறந்ததும் உறைந்துபோன தம்பதி!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே, சிகிச்சைக்காகக் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்ற இடைவெளியைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் கதவை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.


உடன்குடி புதுமனை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (36). தொழிலாளியான இவருக்குக் காளியம்மாள் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 9-ஆம் தேதி, தனது மனைவிக்குச் சிகிச்சை அளிப்பதற்காகப் பேச்சிமுத்து குடும்பத்துடன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.


பிள்ளைகளை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றிருந்தனர். இந்நிலையில், சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய தம்பதியினர், வீட்டின் கதவு உடைந்திருப்பதைக் கண்டு உறைந்து போயினர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகைகள், 25,000 ரொக்கப் பணம்  ஆகியவை திருடப்பட்டிருந்தது.


இது குறித்துப் பேச்சிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மர்ம நபர்கள் வீட்டின் பின்வாசல் கதவை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது முதற்கட்ட விசாரணையில் உறுதியானது. உடன்குடி பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


  • Share on

இனி நடக்க வேண்டாம்... திருச்செந்தூர் வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த 20 ஆண்டுகளில் தூத்துக்குடியின் முகம் மாறுகிறா? ஏன்? இதோ!

  • Share on