தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மாதந்தோறும் நடத்தப்படும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், இம்மாதம் வருகின்ற மார்ச் 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
13.03.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பொறியியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ, ஓட்டுநர் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி முடித்த வேலைநாடுநர்கள் கலந்துகொள்ளலாம். பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை தந்து தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள தங்களின் பதிவு ரத்து ஆகாது. விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் முகாமில் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.
வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான சந்தேகங்களுக்கு 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 'THOOTHUKUDI EMPLOYMENT OFFICE' என்ற Telegram சேனல் வாயிலாகவோ தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
