குளத்தூர் அருகே காணாமல் போன மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் நேற்று காணாமல் போன பள்ளி மாணவி ஒருவர் இன்று அங்குள்ள காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இச்சம்பவத்தை கண்டித்து, வேடநத்தம் கிராமத்தில், குறுக்குச்சாலை - இராமேஸ்வரம் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
