• vilasalnews@gmail.com

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2A முதன்மைத் தேர்வு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

  • Share on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி II & IIA  பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு வரும் மார்ச் 15, 2026 அன்று நடைபெறவுள்ளது. இது குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் தேர்வர்களுக்கான அறிவுறுத்தல்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், வெளியிட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இத்தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 15-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளிலும் நடைபெறும் இத்தேர்வில், மொத்தம் 487 விண்ணப்பதாரர்கள் பங்கேற்க உள்ளனர்.


தேர்வினை எவ்வித இடையூறுமின்றி நடத்துவதற்காக காவல்துறை, தீயணைப்புத் துறை, மின்சார வாரியம், கருவூலத் துறை மற்றும் கல்வித் துறைகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எளிதாக வந்து செல்ல ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தடையில்லா மின்சாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.


தேர்வு ஆணையத்தின் விதிகளின்படி, தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டியது அவசியம். தேர்வு நாளான 15.03.2026 அன்று முற்பகல் 9.00 மணிக்கு முன்னரும் பிற்பகல் 2.00 மணிக்கு முன்னரும் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் ஆஜராகிட வேண்டும். உரிய நேரமான முற்பகல் 9.00 மணிக்கு பின்னரும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரும் வருகை தரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள்  அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


தேர்வு அறைக்குள் முறைகேடுகளைத் தவிர்க்க செல்போன், பேஜர், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், மின்னணு சாதனங்கள், புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் கைப்பைகள் ஆகியவற்றைத் தேர்வர்கள் தேர்வு அறைக்குள் கொண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

பைக் வாங்க ஆசையா? ரூ.50 ஆயிரம் வரை அரசு மானியம் : தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

காட்டுப்பகுதியில் மாணவி சடலம்... வேடநத்தம் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்!

  • Share on