• vilasalnews@gmail.com

தூத்துக்குடி காவல்துறையின் வெளிப்படையான செயல்பாடு... குவியும் பாராட்டு.. இதோ இதுக்குத்தான்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் கைது செய்யப்படுபவர்களின் விபரங்களை பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நவீன டிஜிட்டல் தகவல் திரை அமைக்கப்பட்டுள்ளது.


பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 37-ன் கீழ், கைது நடவடிக்கைகள் குறித்த விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின்படி நிறுவப்பட்டுள்ள இந்தத் திரையில், கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய விபரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும். இதன் மூலம் கைதானவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடி அலைக்கழியாமல் உடனுக்குடன் அங்கேயே தெரிந்துகொள்ள முடியும்.


காவல்துறையின் இத்தகைய நவீன அணுகுமுறை, தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதுடன் சட்டவிரோதக் கைதுகள் மற்றும் காவல் மரணங்கள் போன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க ஒரு முக்கியப் பாதுகாப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெளிப்படையான செயல்பாட்டிற்கு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்து வருகிறது.

  • Share on

மேல்மருவத்தூர் பங்காரு அம்மா 86வது அவதார பெருமங்கல‌ விழா : மக்கள் நலப்பணிகள் வழங்கல்!

உங்கள் வாகன காப்பீடு உண்மையானதா? தூத்துக்குடியில் போலி வாகன காப்பீடு ஆவணங்களைத் தயாரித்து விற்ற கும்பல் சிக்கியது!

  • Share on