தூத்துக்குடியில் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 86வது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு மக்கள் நலப்பணிகள் வழங்கப்பட்டது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 86வது அவதார பெருமங்கல விழா தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் வைத்து நடைபெற்றது. குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜையுடன், நடைபெற்ற சிறப்பு வேள்விபூஜையை சக்திபீட மகளிர் அணி பத்மாவதி தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். உலகில் சமாதானம் வேண்டியும், போர் பதற்றம் தணியவும், இயற்கை சீற்றம் தணியவும், மழைவளம் வேண்டியும் சங்கல்பம் செய்து 108, 1008 தமிழ் மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்ற தலைவர் அப்பாசாமி ஓம் சக்தி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் பங்காரு அடிகளார் அம்மா ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் நலப்பணி விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. ஆர்.முருகன் தலைமை வகித்து ஏழை எளிய மக்களுக்கு தொழில் செய்து பிழைக்க 25 பேருக்கு தையல் இயந்திரங்கள், மருந்து தெளிப்பான் கருவி, இட்லி பாத்திரம், கண்பார்வயற்ற இளைஞருக்கு இசைக்கருவி வாங்க நிதியுதவி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சைக்கிள் மற்றும் 250 பெண்களுக்கு சேலை, ஆடவர்களுக்கு வேஷ்டி துண்டு ஆகிய நலத்திட்டங்களை வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை வேளாண்மை துறை அதிகாரி பிரேம்குமார் தொடங்கி வைத்தார்.
விழாவில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வி, விஜயலெட்சுமி, காஞ்சனா, மாரியப்பன், சக்திவேல், வேள்விக்குழு கிருஷ்ண நீலா, திருவிக நகர் சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், செயலாளர் கணேஷ், தளவாய்புரம் ராஜ், கழுகுமலை அழகர், இந்திராநகர் அழகு மாணிக்கம், அண்ணாநகர் சிவஞானம், இளைஞர் அணி மணி, பாண்டி, புதிய துறைமுகம் கண்ணகி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் செல்வி, பரமேஸ்வரி, அகிலா, காசியம்மாள், முத்துலெட்சுமி, சாந்தி, வீரலெட்சுமி உட்பட ஏராளமான செவ்வாடை பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
