• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் விவசாயிகள் ஷாக்... மாவட்ட ஆட்சியரிடம் பகீர் புகார்!

  • Share on

விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் செயல்பட்டு வந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தில், கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து புகார் அளித்தனர்.


விளாத்திகுளம் மற்றும் புதூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனையின் படி 'விளாத்திகுளம் புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் நிறுவனம்' தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை நம்பி, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களின் கடின உழைப்பின் மூலம் சேமித்த பணத்தை முதலீடு செய்திருந்தனர்.


தற்போது எழுந்துள்ள புகாரின்படி, விவசாயிகளிடம் வசூலிக்கப்பட்ட சுமார் 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த மெகா மோசடிக்கு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது மனைவி பவித்ரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:


நிறுவனத்தின் CEO ஜெகதீஸ்வரன், அவரது மனைவி பவித்ரா மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், தர்மலிங்கம், சுப்புலட்சுமி, சுதா ராணி ஆகியோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். மோசடியில் தொடர்புடைய நபர்களின் சொத்துக்களை முடக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.  ஏமாற்றப்பட்ட விவசாயிகளின் முதலீட்டுத் தொகையை முழுமையாக மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


எங்கள் ரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி ஈட்டிய பணத்தை முதலீடு செய்துவிட்டு, இன்று நடுத்தெருவில் நிற்கிறோம்  என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால், அடுத்தகட்டமாகப் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share on

தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி கொலை வழக்கு : மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு - நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on