• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடி அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக படகில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மீனவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி முத்தரையர் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மாயாண்டி (26). மீனவரான இவர், நேற்று வழக்கம் போல சக மீனவர்கள் நான்கு பேருடன் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து ஒரு நாட்டுப் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.


திரேஸ்புரத்தில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 5 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத தருணத்தில், மாயாண்டி நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், உடனடியாக அவரை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.  கடலில் இருந்து மீட்கப்பட்ட மாயாண்டி, சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.


இந்தச் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாயாண்டியின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி தேங்காய் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து - மாநகரம் முழுவதும் சூழ்ந்த கரும்புகை!

விளாத்திகுளம் விவசாயிகள் ஷாக்... மாவட்ட ஆட்சியரிடம் பகீர் புகார்!

  • Share on