• vilasalnews@gmail.com

ராகுல் காந்தி மிஸ்ஸிங்.. அமித்ஷா என்ட்ரி... அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணையும் த.வெ.க?

  • Share on

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க.வின் பலமான கூட்டணியை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் ஒன்றிணையப் போவதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தி.மு.க. சுமார் 26 கட்சிகள் மற்றும் நூற்றுக்கணக்கான அமைப்புகளுடன் ஒரு பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளது. நாளை திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டில் பெண்களைக் கவரும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அதிகாரம், வலுவான கூட்டணி என இரட்டை ஆயுதங்களுடன் தி.மு.க. களம் காண்கிறது.


மறுபுறம், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் கூட்டணியில் தற்போது பா.ஜ.க., பா.ம.க. போன்ற கட்சிகள் இருந்தாலும், தி.மு.க.வின் மெகா கூட்டணியை வீழ்த்த இது போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே நிலைதான் பா.ஜ.க.விற்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை உயர்த்திய பா.ஜ.க., இந்த சட்டமன்றத் தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


முதல்முறையாக தேர்தல் களம் காணும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.), இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவை அதிக அளவில் பெற்றுள்ளதாகக் கணிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வை விமர்சித்த விஜய், சமீபகாலமாக தனது அரசியல் நிலைப்பாட்டில் சில மாற்றங்களைச் செய்து வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, சமீபத்திய கூட்டங்களில் அவர் பா.ஜ.க.வை விமர்சிப்பதைத் தவிர்த்தது அரசியல் நோக்கர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.


அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதற்கு ஏற்ப, தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் த.வெ.க. ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.


த.வெ.க. தரப்புடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பில் இருந்து ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், தொகுதிப் பங்கீடு குறித்து சுமார் 70 சதவீத இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து அவசரம் காட்டாமல், பெரிய கட்சிகளின் வருகைக்காகக் காத்திருப்பதும் இந்தக் கூட்டணி யூகங்களுக்கு வலுசேர்க்கிறது.


இந்த மூன்று கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து மீண்டும் தி.மு.க.விற்கே சாதகமாக முடியும் என்பதை தலைவர்கள் உணர்ந்துள்ளனர். எனவே, 'தி.மு.க. எதிர்ப்பு' என்ற ஒற்றைப் புள்ளியில் இந்த மூன்று துருவங்களும் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குள் இந்தக் கூட்டணி இறுதி வடிவம் பெற்றால், தமிழக தேர்தல் களம் இதுவரை கண்டிராத ஒரு மகா யுத்தமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

  • Share on

காட்டுப்பகுதிக்குள் ரகசியமாக... பசுவந்தனை போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

விநோத முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த நாம் தமிழர் வேட்பாளர் பாலாஜி.. விளாத்திகுளம் தொகுதி தேர்தல் களத்தில் ஒரு பசுமை!

  • Share on