தமிழகத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வழக்கமாகத் தேர்தல் காலங்களில் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் கையாளும் விநோத உத்திகள் இந்த முறையும் அரங்கேறும் என்பதில் மாற்றமில்லை.
ஹோட்டல்களில் புரோட்டா ஆம்லெட் போடுவது, தெருக்களைப் பெருக்குவது, சாலையோரக் கடைகளில் அவர்களோடு அமர்ந்து வியாபாரம் செய்வது எனப் பல வேட்பாளர்கள் நடிப்பு அரசியலில் இறங்கிவிடுவார்கள்
இத்தகையச் சூழலில், விநோத முறைகள் என்ற பெயரில் வாக்காளர்களை ஏமாற்றாமல், சமூக அக்கறையோடு எதிர்காலச் சந்ததியினரின் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி களம் இறங்கியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி, இன்று கீழ வைப்பார் மற்றும் சிப்பிகுளம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளிக்காமல், அப்பகுதி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி தமக்கு ஆதரவு கோரினார்.
"எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டியது தூய்மையான காற்றும், பசுமையான சூழலுமே" என்பதை வலியுறுத்தும் வகையில் இவரது பிரச்சாரம் அமைந்திருந்தது. இது வாக்காளர்களைக் கவர்ந்ததோடு மட்டுமன்றி, சமூக ஆர்வலர்களிடையே பெரும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்தச் தேர்தல் பிரச்சார நிகழ்வில் வேட்பாளருடன் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார், கீழவைப்பார் பொறுப்பாளர் ரோம்லெஸ் பிரசாத் மற்றும் பெருமாள், சிப்பிகுளம் பொறுப்பாளர் கிளாட்வின் மற்றும் ஆல்வின், உழவர் பாசறை செயலாளர் பாண்டி, தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் ஜோசப் நல்லதம்பி, மேல்மந்தை பொறுப்பாளர் சோபன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களையும், மரக்கன்றுகளையும் வழங்கி வாக்கு சேகரித்தனர்.
பொதுவாகத் தேர்தல் என்றாலே பணமும், பரிசுப் பொருட்களும் புழங்கும் இடமாகப் பார்க்கப்படும் நிலையில், ஒரு வேட்பாளர் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை வழங்குவது தொகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "நடிப்பு அரசியலை விட, இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்களே மாற்றத்தை ஏற்படுத்தும்" என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
