• vilasalnews@gmail.com

தூத்துக்குடி எஸ்.ஐ-க்கள் இடமாற்றத்தில் திடீர் திருப்பம்... நெல்லை சரக டி.ஐ.ஜி உத்தரவு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 209 காவல் சார்பு ஆய்வாளர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி பிறப்பித்திருந்த உத்தரவு தற்போது அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


வட்டாட்சியர்கள், பி.டி.ஓ-க்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட அளவிலான அதிகாரிகளாகக் கருதப்படுகிறார்கள். தேர்தல் விதிகளின்படி, இவர்கள் சொந்தத் தொகுதியிலோ அல்லது ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாகவோ பணிபுரிந்தால், அவர்களை மாவட்டத்திற்குள்ளேயே வேறு இடத்திற்கு மாற்றினால் போதுமானது.


முன்னதாக, தூத்துக்குடியைச் சேர்ந்த 209 பேர் வெளி மாவட்டங்களுக்கும், அங்கிருந்தவர்கள் தூத்துக்குடிக்கும் மாற்றப்பட்டிருந்தனர். இது கூடுதல் பணிச்சுமையையும் நடைமுறைச் சிக்கலையும் ஏற்படுத்திய நிலையில், தேர்தல் ஆணையத்தின் தெளிவுபடுத்தப்பட்ட உத்தரவின்படி இந்த வெளி மாவட்ட இடமாற்றம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.


தென்மண்டல ஐ.ஜி விடுத்துள்ள புதிய உத்தரவின்படி, அனைத்துக் காவல் ஆணையர்கள் மற்றும் டி.ஐ.ஜி-க்கள் இந்த மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும். இதனால், வெளி மாவட்டங்களுக்குச் செல்லவிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் தொடர்ந்து தற்போதைய மாவட்டங்களிலேயே பணியாற்றுவார்கள். ஆனால், அவர்கள் ஒரே தொகுதியில் நீண்ட காலம் இருந்தால், மாவட்டத்திற்குள்ளேயே வேறு ஒரு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  • Share on

ஓட்டப்பிடாரத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் : எம்.எல்.ஏ எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கம்!

மீனவர்களுக்கு மகுடம் சூட்டிய திமுக : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!

  • Share on