ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா இன்று அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று, குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி தெற்கு பரும்பூர் பகுதியில் ரூ.41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
வ.உ.சி தெருவில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக ரூ.33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை, அதேபோல், சிவன் கோவில் தெருவில் ரூ.11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா இன்று அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், ஊராட்சி செயலர் இராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், பரும்பூர் ராஜாமணி, முருகன், தெற்கு ஆவரங்காடு கிருஷ்ணசாமி, கிளைச் செயலாளர் இளங்கோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




