• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் காவலர் குடியிருப்பு வளாகம் தயார்!

  • Share on

தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் காவல்துறையினருக்காகப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட 10 மாடி அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று  காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். 


தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, திருநெல்வேலி கோட்ட தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 100 வீடுகளைக் கொண்ட இந்த நவீன அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் காணொளி வாயிலாகத் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் குத்துவிளக்கேற்றி குடியிருப்புகளைத் திறந்து வைத்தார்.


இந்த விழாவில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் குமரேசன், தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் ராகுல், V கோபால், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

  • Share on

கடலையூரில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் : எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!

காணாமல் போன ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலாளி பிணமாக மீட்பு - திருச்செந்தூரில் பரபரப்பு!

  • Share on