• vilasalnews@gmail.com

கடலையூரில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் : எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், கடலையூர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 


சுமார் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.இந்நிகழ்வில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, புதிய அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். 


இந்த விழாவில் மண்டல துணை வட்டாட்சியர் பொன்செல்வி, கோவில்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மதிமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மாரிசாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சோபியா பொன்னையா, சுரேஷ்குமார், கிளைச் செயலாளர்கள் மாடசாமி, வீரக்குமார், முத்துக்குமார் மற்றும் ஒன்றிய கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலமுருகன் 


எட்டயபுரம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன், வார்டு செயலாளர் பிச்சை, தகவல் தொழில்நுட்ப அணி (மகளிர் பிரிவு) அர்ச்சனா, மகளிர் அணி நிர்வாகிகள் பத்திரகாளி, சுபா உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்களும்  கலந்து கொண்டனர்.


  • Share on

மகிழ்ச்சியில் அயன்பொம்மையாபுரம் கிராம மக்கள்... நவீன வசதிகளுடன் கூடிய புதிய அங்கன்வாடி மையம் தயார்!

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் காவலர் குடியிருப்பு வளாகம் தயார்!

  • Share on