தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்பொம்மையாபுரம் கிராமத்தில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய அங்கன்வாடி கட்டிடத்தை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் இன்று நேரில் சென்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், கிளை செயலாளர்கள் பாஸ்கர், குருசாமி மற்றும் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் காரல் மார்க்ஸ்,திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அயன்பொம்மையாபுரம் கிராம பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.




