• vilasalnews@gmail.com

ஜமீன்கோடாங்கிபட்டியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு - எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பங்கேற்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜமீன்கோடாங்கிபட்டி கிராமத்தில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் சுமார் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன்  கட்டி முடிக்கப்பட்டது.


விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்தார். பின்னர் அவர் கட்டிடத்தின் வசதிகளைப் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிளைச் செயலாளர் சந்தனவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மேலும், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் ஜமீன்கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

குருவார்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம்: எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!

மகிழ்ச்சியில் அயன்பொம்மையாபுரம் கிராம மக்கள்... நவீன வசதிகளுடன் கூடிய புதிய அங்கன்வாடி மையம் தயார்!

  • Share on