• vilasalnews@gmail.com

கோவில்பட்டி தீ விபத்து : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் மற்றும் நிதியுதவி!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தீப்பெட்டி கிடங்கில் நேற்று காலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி, விஜயாபுரி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (27) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த சுடலைமுத்து (42) மற்றும் கணேசன் (47) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க ஆணையிட்டுள்ளார்.


உயிரிழந்த கார்த்திக்கின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சுடலைமுத்து மற்றும் கணேசன் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த கார்த்திக்கின் குடும்பத்தினருக்கு தனது ஆறுதல்களையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • Share on

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க தமாகா மாவட்ட இளைஞரணி தலைவர் கனி வலியுறுத்தல்!

வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பு : தூத்துக்குடி அருகே மக்கள் அலறி ஓட்டம்!

  • Share on