• vilasalnews@gmail.com

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க தமாகா மாவட்ட இளைஞரணி தலைவர் கனி வலியுறுத்தல்!

  • Share on

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கனி வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கனி, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இணையதளம் மூலம் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: 


அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போரால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன், பக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுமார் ஒரு கோடிக்கும் மேலான இந்தியர்கள் வசிக்கின்றனர்.


இஸ்ரேலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் இணைந்து உறுதி செய்து, இந் தியாவிற்கு மீட்டுக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • Share on

மார்ச்.,4-ல் கோவில்பட்டியில் நாதக வேட்பாளர் அறிமுக கூட்டம்!

கோவில்பட்டி தீ விபத்து : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் மற்றும் நிதியுதவி!

  • Share on