• vilasalnews@gmail.com

மார்ச்.,4-ல் கோவில்பட்டியில் நாதக வேட்பாளர் அறிமுக கூட்டம்!

  • Share on

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  திருச்சியில் நடைபெற்ற மாற்றத்தை விரும்பும் மக்களின்  கட்சி மாநாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.


அதில், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் பாண்டி என்பவரை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.


இதனையடுத்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் அருகில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில், மார்ச் 4, 2026 அன்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது.


முன்னதாக கூட்டத்தின் தொடக்கமாக வேட்பாளர் வழக்கறிஞர் பாண்டி, தேர்தல்  பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இனாம் மணியாச்சி மேம்பாலம்  அருகில் ஒன்று கூடி முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக, கூட்டம் நடக்கும் மண்டபத்திற்கு வருகிறார்கள். அப்போது, வரும் வழியில்  தலைவர்கள் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.


மேலும், இந்நிகழ்வுகளில் தமிழ் தேசிய உணர்வாளர்கள், தமிழ்த் தாய் பிள்ளைகள், கட்சி நிர்வாகிகள்,  தொண்டர்கள் என பலரும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கோவில்பட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

  • Share on

கனிமொழியா ? அனிதா ராதாகிருஷ்ணனா? திமுக தலைமையின் உத்தரவால் திருச்செந்தூர் தொகுதியில் திடீர் திருப்பம்!

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க தமாகா மாவட்ட இளைஞரணி தலைவர் கனி வலியுறுத்தல்!

  • Share on