• vilasalnews@gmail.com

மீனவர் ஓட்டு மீனவருக்கே... அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும்: தூத்துக்குடியில் திரண்ட பரதர் இன மக்கள்!

  • Share on

தூத்துக்குடியில் பரதர் நலக் கூட்டமைப்பு சார்பில் பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாடு அண்மையில் பனிமய மாதா பேராலயம் முன்பாக எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மீனவ மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தொழிலதிபர் சேசையா வில்லவராயர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தூத்துக்குடி மட்டுமல்லாது கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றத் தலைவர் ஹெர்மன் கில்ட் வரவேற்புரையாற்ற, சமூகச் செயற்பாட்டாளர் ஜெரோன் குமார் சிறப்புரையாற்றினார். ஆலன் பரதர், ராஜா போஸ் ரீகன், இக்னேஷ், ராஜன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். 


இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியை கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரித்து, மீனவ மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் பரவர் சமூகத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் போன்ற முன்னணி கட்சிகள் கடலோரத் தொகுதிகளில் இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்.


கடலில் உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். மேலும், அரசுப் பணிகளில் மீனவர்களுக்கு 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி கட்டிடத்திற்கு ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து பெயர் சூட்டப்பட வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பாண்டியாபதி தேர்மாறன் பெயரைச் சூட்ட வேண்டும். உள்ளிடவைகள் குறிப்பிடத்தக்கது.


மாநாட்டின் நிறைவாக மருத்துவர் கவின் கார்ட்வின் நன்றி உரையாற்றினார். இக்கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.

  • Share on

விவசாயமா? நான்கு வழிச்சாலையா? - விளைநிலங்களைக் காக்க கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு !

நாளொன்றுக்கு ரூ. 1,000 கூடுதல் வருமானம்.. தூத்துக்குடி விவசாயிகளுக்கு வந்தது நல்ல சேதி!

  • Share on