• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சோகம்: வீட்டில் ஏற்பட்ட மின்தடையைச் சரிசெய்ய முயன்ற எலக்ட்ரிஷியன் மின்சாரம் தாக்கி பலி!

  • Share on

தனது வீட்டில் ஏற்பட்ட மின்தடையைத் தாமாகவே சரி செய்ய முயன்ற எலக்ட்ரிஷியன் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி அண்ணா நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சாமுவேல் (25). எலக்ட்ரிஷியனான இவர், சம்பவத்தன்று அதிகாலை தனது வீட்டில் ஏற்பட்ட மின் பழுதைச் சரி செய்ய முயற்சித்துள்ளார்.


வீட்டில் திடீரென மின் தடை ஏற்பட்டதால், வீட்டின் முன் இருந்த மின் கம்பத்தில் பழுது இருக்கலாம் என அவர் கருதியுள்ளார். மின் கம்பத்தில் ஏறிப் பழுதை நீக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாகச் சாமுவேல் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார், உயிரிழந்த சாமுவேலின் உடலைக் கைப்பற்றினார். உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • Share on

தூத்துக்குடி மக்களே ரெடியா? புதிய ரயில்கள் மற்றும் நீட்டிப்பு குறித்து வெளியான முக்கிய தகவல்!

தூத்துக்குடி : இளம்பெண்ணுக்குத் தொடர் டார்ச்சர் - சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்!

  • Share on