• vilasalnews@gmail.com

ஜெ.,பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் தினத்தில் எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் மெகா கோலப்போட்டி... நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாடு!

  • Share on

எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் மெகா கோலப்போட்டி நடைபெற உள்ளதாக அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தெரிவித்துள்ளார்.


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நகர அதிமுக செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் மெகா கோலப் போட்டி வருகிற 22.2.2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெற முடியாமல் போனதால், இப்போட்டியானது சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.


இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எல்இடி டிவி, மிக்சி, கிரைண்டர்  உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்ட உள்ளது. மேலும், போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள், எட்டையாபுரம் நகர அதிமுக அலுவலகத்தில் தங்களது பெயர்களை முன்பதிவு  செய்ய வேண்டும் என அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தெரிவித்துள்ளார்.

  • Share on

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தூத்துக்குடி டூ ஹைதராபாத் ரயில் சேவை தொடக்கம் : அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

  • Share on