அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் ஆலோசனையின்படி, தூத்துக்குடியில் இன்று அதிமுக சார்பில் தீவிர தேர்தல் பிரசாரம் மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39-வது வட்டச் செயலாளருமான திருச்சிற்றம்பலம் தலைமையில் இந்த விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது. சிவன் கோவில் தெரு, தெப்பக்குளம் தெரு, வடக்கு ரத வீதி, பத்ரகாளியம்மன் கோவில் தெரு, மேலூர் மற்றும் கீழ ரங்கநாதபுரம், ரஹ்மத்துல்லாபுரம், பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
விடியா ஆட்சி - உங்கள் பில்லே சாட்சி என்ற முழக்கத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை ஏற்றம், பொதுமக்களைப் பாதிக்கும் மின்சாரக் கட்டண உயர்வு, சுமத்தப்பட்டுள்ள சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வுகள், போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் திமுக அரசின் மீது முன்வைக்கப்பட்டன. தமிழக மக்கள் படும் இன்னல்களை எடுத்துரைத்ததோடு, அதிமுகவின் சார்பில் எடப்பாடியார் அறிவித்துள்ள மக்கள் நலன் சார்ந்த மகத்தான தேர்தல் வாக்குறுதிகளையும் நிர்வாகிகள் பொதுமக்களிடம் விளக்கிக் கூறினர்.
இந்த நிகழ்வில் வட்ட துணைச் செயலாளர் முத்துவேல், வட்டப் பிரதிநிதிகள் மெத்தகடை ஆறுமுகம், ஒர்க்ஷாப் ரமேஷ், சங்கர வடிவு, விஜயலட்சுமி, சுகன்யா, பூத் பகுதிச் செயலாளர்கள் உதயகுமார், வைகுண்ட சுந்தர், வீரபத்திரன், திலகர், முருகன், சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




