• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்: மார்ச் 4 உள்ளூர் விடுமுறை - முழு விபரம் உள்ளே!

  • Share on

அய்யா வைகுண்டசாமியின் 194-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மார்ச் 4-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

 

மாசி மாதம் 20-ம் தேதி நடைபெறவுள்ள அய்யா வைகுண்டசாமியின் 194-வது அவதார தின விழா மார்ச் 4, 2026 (புதன்கிழமை) அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் பொருந்தும். இருப்பினும், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது. 


இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மார்ச் 14, 2026 (இரண்டாவது சனிக்கிழமை) அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது 'செலாவணி முறிச் சட்டத்தின்' (Negotiable Instruments Act 1881) கீழ் வராது என்பதால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இது பொது விடுமுறை கிடையாது. அய்யா வைகுண்டசாமியின் அவதார தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தென் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பக்தர்களின் வசதிக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • Share on

குருமலை ஸ்ரீ அய்யனார் கோவில் கொடை விழா : முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் பங்கேற்பு!

மக்கள் நலனா? அரசு வருவாயா? மேயருக்கு எதிராக தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் வெடித்த திமுக கவுன்சிலர்களின் விவாதம்!

  • Share on