• vilasalnews@gmail.com

குருமலை ஸ்ரீ அய்யனார் கோவில் கொடை விழா : முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் பங்கேற்பு!

  • Share on

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருமலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் கோவில் கொடை விழா இன்று (26/02/2026) வெகுவிமர்சையாக நடைபெற்றது.


இவ்விழாவில் கிராமப் பெரியவர்கள் மற்றும் இளைஞர்களின் அழைப்பினை ஏற்று, திமுக சார்பில் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கவுன்சிலர் பிரியா குருராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கிராமத்திற்கு வருகை தந்த அவருக்கு, இளைஞர்கள் உற்சாகமான வானவேடிக்கைகளுடன், மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


தொடர்ந்து, அவர் பொதுமக்களுடன் இணைந்து சாமி தரிசனம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டார். விழாவின் ஒரு பகுதியாக, கோவில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான அன்னதான நிகழ்விற்காகத் தனது சொந்த நிதி உதவியினை அவர் வழங்கினார்.


இந்த நிகழ்விற்கு குருமலை பஞ்சாயத்து முன்னாள்  .தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சரவணா டிராவல்ஸ் உரிமையாளர் முத்துப்பாண்டி மற்றும் அருள்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் ஊர் பொதுமக்கள், பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கிராம இளைஞர்களும் நிர்வாகிகளும்  செய்திருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் பரபரப்பு... பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக - காரணம் என்ன?

தூத்துக்குடி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்: மார்ச் 4 உள்ளூர் விடுமுறை - முழு விபரம் உள்ளே!

  • Share on