• vilasalnews@gmail.com

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மீண்டும் ஒளிருமா தீபம்? தட்டார்மடம் பகுதியில் முருக பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

  • Share on

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்றும் வழிபாட்டை விரைவில் தொடங்க வலியுறுத்தி, சாத்தான்குளம் வட்டார முருக பக்தர்கள் பேரவை சார்பில் சிறப்பு கந்த சஷ்டி பாராயணப் பிரார்த்தனை நடைபெற்றது.


தட்டார்மடம் மேலத்தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சிவன் குடியேற்று, அழகப்பபுரம், பிச்சிவிளை, பெருமாள்புரம், கொம்மடிக்கோட்டை, வைரவம், முக்கந்தன்விளை, மோடி நகர், இடைச்சிவிளை, சுப்பிரமணியபுரம், புத்தன்தருவை–கஸ்பா தெரு, உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் அந்தந்தப் பகுதி முருக பக்தர்கள் ஒன்றிணைந்து கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து வழிபாடு நடத்தினர்.


இந்த வழிபாட்டு நிகழ்வில் இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சாத்தான்குளம் ஒன்றிய நிர்வாகிகள், பொதுச்செயலாளர் மாயவன முத்துசாமி, ஒன்றிய செயலாளர்கள் வெங்கட கிருஷ்ணன், மாரிமுத்து. துணைத்தலைவர் சித்திரை செல்வன், தலைவர் மணி கிளைத்தலைவர் முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் ராமக்கனி, கீதா, தமிழரசி உட்பட பல முருக பக்தர்கள் இந்தத் கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று முருகப் பெருமானை வழிபட்டனர்.

  • Share on

சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் மோதல்: வட்டாட்சியர் முன்னிலையில் சமாதானம் - வழக்கை திரும்பப் பெற முடிவு!

திமுவினருக்கு சுயமரியாதை உணர்வு இல்லையா? - கடம்பூர் ராஜூவிற்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்!

  • Share on