• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அதிரடித் தீர்ப்பு: சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.


நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (26) என்பவர், கடந்த 2024-ம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். தொடர்ந்து அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நாசரேத் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரைக் கைது செய்தனர்.


இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று (23.02.2026) நீதிபதி (பொறுப்பு) பிரீத்தா தீர்ப்பினை வழங்கினார். பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.10,000 அபராதமும், கடத்தல் குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.5,000 அபராதமும் ஆக மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


வழக்கை நேர்த்தியாகப் புலனாய்வு செய்த ஆய்வாளர் ஜீன்குமார், சாட்சிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆவுடையப்பன், நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஜானகி, விசாரணைக்கு உதவிய தலைமை காவலர் ரேவதி ஆகியோரின் சிறப்பான பணியைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


  • Share on

ஹாக்கி வீரரா நீங்க? தூத்துக்குடி மாவட்ட அணியில் இடம் பிடிக்க ஒரு அரிய வாய்ப்பு!

குமரிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு நினைவு வளைவு திறப்பு!

  • Share on