தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான மாவட்ட அளவிலான அணித் தேர்வுகள் வரும் பிப்ரவரி 26 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
தமிழ்நாடு ஹாக்கி கழகம் சார்பில் மாநில அளவிலான சப்-ஜூனியர் போட்டிகள் வரும் பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை நடைபெறுகின்றன. இதில் மாணவர்களுக்கான போட்டிகள் ராமநாதபுரத்திலும், மாணவியருக்கான போட்டிகள் சிவகங்கையிலும் நடைபெறுகின்றன.
இந்த மாநிலப் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாகப் பங்கேற்கும் அணிகளைத் தேர்வு செய்வதற்காகவே இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.தேர்வு நடைபெறும் நாள் 26.02.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 6:30 மணிக்கு நாடார் மேல்நிலைப் பள்ளி ஹாக்கி மைதானம், கோவில்பட்டியில் நடைபெறுகிறது.
பங்கேற்பதற்கு தகுதியான வீரர்கள் 01.01.2010 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது இம்மாவட்டப் பள்ளிகளில் பயில்பவராகவோ இருக்க வேண்டும். ஆதார் அட்டை மற்றும் பள்ளி அடையாள அட்டை (Original & Xerox) கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
ஹாக்கி கழக தூத்துக்குடி கிளையின் செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா மற்றும் பயிற்சியாளர்கள் அஸ்வின், வேல்முருகன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.



