• vilasalnews@gmail.com

தூத்துக்குடி இளைஞர் ஈராலில் வெட்டிப்படுகொலை : போலீசார் விசாரணை!

  • Share on

தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஈராலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே உள்ள தெற்கு காலான்கரையைச் சேர்ந்த ஊர்காவலன் என்பவரது மகன் பெரியநாயகம் ( 33). இவர் இன்று ( பிப்.,22 ) இருக்கன்குடியில் நடைபெற்ற தனது உறவினர் கவர்னகிரியைச் சேர்ந்த செந்தூர்கனி இல்ல காதணி விழாவில் கலந்து கொண்டு, உறவினர்களுடன் வீடு திரும்பியுள்ளார்.


வரும் வழியில் ஈராலில் வாகனத்தை டீ கடையில் நிறுத்தியுள்ளர். அப்போது வாகனத்தில் இருந்த பெரியநாயகத்தை அங்கு வந்த அவரது உறவினர் ஒருவர் அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பலியான பெரியநாயகத்தின் உடலை எட்டையபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இருக்கன்குடியில் நடைபெற்ற காதணி விழாவில் நடந்த கறி விருந்தில்  பெரியநாயகத்திற்கும் அவரது உறவினர் முனியசாமி என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதும் முன்விரோதமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Share on

தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் : 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அரிசி, சேலைகளை வழங்கினார் தளபதி சுதாகர்!

ரியல் ஹீரோக்களான தூத்துக்குடி போலீஸ்.. 30 நிமிடத்தில் அதிரடி.. பத்திரமாக மீட்கப்பட்ட சிறுவன்!

  • Share on