• vilasalnews@gmail.com

தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் : 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அரிசி, சேலைகளை வழங்கினார் தளபதி சுதாகர்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


மாப்பிள்ளையூரணி ராமதாஸ் நகர் குடியிருப்புப் பகுதி மகளிர் அணி சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் விழாவில், சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் 'மக்கள் சேவகன்' தளபதி சுதாகர் கலந்துகொண்டார். அவர் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி மூட்டைகள் மற்றும் சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார்.


இந்நிகழ்வில், மத்திய மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் விஜூ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கௌதம் பாண்டியன், அருண்பிரகாஷ், தீனதயாளன், வடக்கு ஒன்றிய செயலாளர் சேவியர், ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரன், தூத்துக்குடி புறநகர் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர்கள் அருண்குமார், கண்ணன், அருள் அஜய் மற்றும் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் இணை செயலாளர் லட்சுமணன், பொருளாளர் சந்தன முத்து, செயற்குழு உறுப்பினர் ராஜா, அருள் சஞ்சய், மணிகண்டன், ஈஸ்வர், பாஸ்கர், ரியால்சன், ஆனந்த், சந்தனம், ஹரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மதுபான பாரில் சோதனையிட்ட விவகாரம் - சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை!

தூத்துக்குடி இளைஞர் ஈராலில் வெட்டிப்படுகொலை : போலீசார் விசாரணை!

  • Share on