'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் நடைபெற்றது.
234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். இந்த வேட்பாளர் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என ஆண் - பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என வேட்பாளர்கள் பெரும்பாலானோர் பட்டப்படிப்பை முடித்தவர்கள்.
இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.
அதன்படி , ஓட்டப்பிடாரம் – அனுசியா (முதுகலை வணிகவியல் / ஆசிரியர் கல்வியியல்), தூத்துக்குடி – இரா. ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (இளங்கலை அரசியல் அறிவியல்), திருச்செந்தூர் – ஒபிலியா (இளநிலை கணினி பயன்பாடு), ஸ்ரீவைகுண்டம் – சண்முகசுந்தரம் ( தொழிற்கல்வி பட்டயம்), விளாத்திகுளம் – பொறியாளர் பாலாஜி (பொறியியல் பட்டதாரி ), கோவில்பட்டி - வழக்கறிஞர் பாண்டி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.




