• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் டூ பெங்களூருக்கு புதிய ரயில் சேவை... துரை வைகோவிடம் வந்த கோரிக்கை!

  • Share on

தூத்துக்குடிக்கு வருகை தந்த ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோவை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வே. ரஞ்சன் நேரில் சந்தித்தார். அப்போது, திருச்செந்தூர் பகுதி மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார்.


அந்த மனுவில், நெல்லையிலிருந்து சென்னைக்கு காலை 6:00 மணிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலைப் பிடிக்க, திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குப் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. நெல்லையில் இரவு நேரத்தில் நிறுத்தப்படும் ரயில்களில் ஒன்றை, இரவு 8:00 மணிக்கு மேல் திருச்செந்தூருக்கு இயக்க வேண்டும். அந்த ரயிலை மீண்டும் அதிகாலையில் திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு இயக்கினால், பயணிகள் வந்தே பாரத் ரயிலைத் தவறவிடாமல் பயணிக்க முடியும்.


திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பெங்களூரில் மென்பொருள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் போக்குவரத்துச் சிரமத்தைக் குறைக்க, திருச்செந்தூரிலிருந்து பெங்களூருக்கு புதிய நேரடி ரயில் சேவையைத் தொடங்க வேண்டும்.


திருச்செந்தூர் ஒரு மிகமுக்கிய ஆன்மீகத் தலமாக இருப்பதால், நாள்தோறும் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் ரயில்கள் தேவைப்படுகின்றன. ஆனால், போதிய நடைமேடைகளும், தண்டவாளங்களும் இல்லாதது பெரும் தடையாக உள்ளது.


திருச்செந்தூர் ரயில் நிலையத்தை போர்க்கால அடிப்படையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி புதிய ரயில்களை இயக்க வழிவகை செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி, விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • Share on

மார்ச் 5-ல் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக தலைமையில் சாலை மறியலுக்கு தயாராகும் பொது மக்கள்!

சென்னை செல்ல காத்திருந்தவரை மறித்த மரணம்... கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடந்த விபத்து!

  • Share on