• vilasalnews@gmail.com

மார்ச் 5-ல் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக தலைமையில் சாலை மறியலுக்கு தயாராகும் பொது மக்கள்!

  • Share on

மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வரும் உயர்ரக பட்டாசு ஆலைக்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதியை ரத்து செய்யக் கோரியும், அனுமதி வழங்கிய அதிகாரிகளின் போக்கைக் கண்டித்தும் வரும் மார்ச் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று மேலக்கரந்தை சந்திப்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டத்திற்குட்பட்ட முத்துலாபுரம், இனாம் அருணாசலபுரம், கீழ்நாட்டுக்குறிச்சி, மாசார்பட்டி, அயன் ராஜாபட்டி உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் புதிய பட்டாசு ஆலைகள் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.


இந்த ஆலைகள் அமைக்கப்படும் போது, பொதுமக்களிடம் எந்தவிதக் கருத்துக் கேட்பு கூட்டமும் நடத்தப்படவில்லை. விவசாய நிலங்களுக்குச் செல்லும் வண்டிப்பாதையை ஆக்கிரமித்து விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த மற்றும் உயர்ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதால் இப்பகுதி மக்களுக்குப் பேராபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.


எனவே தன்னிச்சையாக வழங்கப்பட்ட கட்டிட அனுமதி மற்றும் பட்டாசு தயாரிக்கும் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விதிமீறி கட்டப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட நவீன பட்டாசு தயாரிப்பு அறைகளுக்கு உடனடியாகச் சீல் வைக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட விவசாயப் பாதைகளை மீட்டுத் தர வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  05.03.2026 (வியாழக்கிழமை) அன்று  காலை 10:00 மணிக்கு மேலக்கரந்தை முக்கு ரோடு சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் 


பொது மக்கள் மற்றும் விவாசியிகளை ஒன்று திரட்டி அதிமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.  விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில்  நடைபெறும் இந்த மறியல் போராட்டத்திற்கு  அஇஅதிமுக நிர்வாகிகள் தெய்வேந்திரன், வெம்பூரார், வரதராஜன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் (பாஜக, தமாகா, அமமுக) உள்ளிட்ட பலர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள அதிமுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



  • Share on

194 பயனாளிகளுக்கு இலவச இ-பட்டாக்கள் - எம்.எல்.ஏ எம்.சி.சண்முகையா வழங்கினார்!

திருச்செந்தூர் டூ பெங்களூருக்கு புதிய ரயில் சேவை... துரை வைகோவிடம் வந்த கோரிக்கை!

  • Share on