• vilasalnews@gmail.com

தூத்துக்குடிக்கு வருகிறது வந்தே பாரத் ரயில்!

  • Share on

தமிழகத்தின் மிக முக்கியமான தொழில் மற்றும் வர்த்தக மையமான தூத்துக்குடிக்கு, வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே வாரியத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவல் தென் மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி என்றாலே நம் நினைவுக்கு வருவது உப்பளங்களும், முத்துக்களும் மட்டுமல்ல; அது தமிழகத்தின் பொருளாதார நுழைவுவாயில். உப்பு உற்பத்தி, மீன் ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்து எனத் தினமும் கோடிக்கணக்கான வர்த்தகம் இங்கு நடைபெறுகிறது.


ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர், மணப்பாடு தேவாலயம், நவதிருப்பதி தலங்கள் என ஆன்மீகப் பயணிகளின் வருகையும் இங்கு அதிகம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரத்திற்கு, சென்னையில் இருந்து தற்போது 'முத்துநகர் எக்ஸ்பிரஸ்' மட்டுமே ஒரே நேரடி ரயில் சேவையாக உள்ளது.


50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், விமான சேவைகளும் இருந்தாலும், நடுத்தர மற்றும் வணிக வகுப்பினர் ரயிலையே பெரிதும் நம்பியுள்ளனர். தற்போது இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடியைச் சென்றடைய சுமார் 11 முதல் 12 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. ஆனால், புதிய வந்தே பாரத் ரயில் பயன்பாட்டுக்கு வந்தால், சென்னை - திருச்சி - மதுரை - வாஞ்சி மணியாச்சி வழியாக வெறும் 8 முதல் 9 மணி நேரத்திற்குள் தூத்துக்குடியைச் சென்றடையலாம்.


தெற்கு ரயில்வேயின் இந்தப் பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில், அது தூத்துக்குடி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

  • Share on

தூத்துக்குடிக்குள் நுழையும் வாகனங்கள் தப்ப முடியாது... எஸ்பி மதன் நேரடி விசிட்!

கழுகுமலை தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து - லட்சக்கணக்கில் பொருட்கள் சேதம்!

  • Share on