• vilasalnews@gmail.com

கோரிக்கை நிறைவேறும் வரை ஓயமாட்டோம்... தூத்துக்குடியில் வருவாய் கிராம ஊழியர்கள் தொடர் போராட்டம்!

  • Share on

தமிழகம் முழுவதும் வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.


வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். கிராம உதவியாளர்களையும் உள்ளடக்கி TAPS ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் போது, வாரிசுதாரர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணியிடங்களை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு வட்டத் தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் குமாரலிங்கம் மற்றும் மாவட்டச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் கோரிக்கைகளின் அவசியம் குறித்து விரிவான விளக்கவுரை ஆற்றினர்.


முன்னதாக வட்டச் செயலாளர் ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்ற, நிறைவாக வட்டப் பொருளாளர் ஹசீனா கஜிதா பானு நன்றியுரை வழங்கினார். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • Share on

கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல்: கோலாகலத் திறப்பு விழா!

தரமாகவும், விரைவாகவும் முடியுங்கள்... மாநகராட்சி அதிகாரிகளுக்கு தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி உத்தரவு!

  • Share on