தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், கருங்குளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. செய்துங்கநல்லூர் குரு மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் முன்னிலை வகித்தது.
இவ்விழாவிற்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் குத்துவிளக்கேற்றி விழாவினை முறைப்படி தொடங்கி வைத்தார். பின்னர், அங்கு திரண்டிருந்த ஏராளமான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசின் சார்பில் வளைகாப்புப் பொருட்கள் மற்றும் சீர் வரிசைகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சி ராணி மற்றும் ஆறுமுகராஜா நயினார், வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சண்முகப்பிரியா, மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியா, கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளர்கள் சுரேஷ்காந்தி மற்றும் ராமசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ் குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கொம்பையா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சஞ்சய், கிளை செயலாளர் குண்டுமணி, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.




