மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தைப் புறக்கணித்து வஞ்சித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் நாளை (பிப்ரவரி 12) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி ஆலோசனையின் பேரிலும், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான தலைமையில் மாலை 4 மணிக்கு புதியம்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள், கிளை கழகச் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் கட்சி உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கேட்டுக்கொண்டுள்ளார்.




