மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நாசரேத் வே.ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நாசரேத் எஸ். வேதாவளாகம் 1ஆவது தெருவில் வசித்து வரும் வே.ரஞ்சன் நாசரேத் வே.ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டப்பிடாரம், திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் தெற்கு மாவட்டத்திற்குள் அடங்கும்.
மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக ஆர்.எஸ்.ரமேஷ் தொடர்ந்து பணியாற்றுவார். கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் வடக்கு மாவட்டத்திற்குள் அடங்கும் என்று மதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




