கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, சவலாபேரி கிராமத்தில், ஊர் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியிலிருந்து 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கலையரங்கத்தினை ஊர் பெரியவர்கள் மற்றும் இளைஞர்களின் முன்னிலையில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார், அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஊர் பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டியன் தலைமை வகித்தார், திமுக கயத்தாறு இளைஞர் அணி பெரியசாமி, சிவசுப்பிரமணியன், சுடலை பாண்டியன், வெள்ளத்துரை, தங்கவேலு, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி கருத்தபாண்டியன், திமுக இளைஞரணி சஞ்சய், மற்றும் ஊர் பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். திமுக கிளை கழக செயலாளர் மருதுபாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.




