இந்திய கடல்சார் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் (VOCPA), "இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாடு 2026"-க்கு முன்னதாக, துறைமுக செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்த சிறப்பு உயர்மட்ட நிகழ்வை இன்று நடத்தியது.
துறைமுகத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சகச் செயலாளர் விஜய் குமார் காணொளி வாயிலாகச் சிறப்புரையாற்றினார். இந்தியத் துறைமுகங்களின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய போட்டித்திறனை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மேம்படுத்துதல். நேரடி செயல்விளக்கம், துறைமுகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள AI பயன்பாடுகள் மற்றும் IoT தொழில்நுட்பங்கள் குறித்து நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

டிஜிட்டல் ட்வின்ஸ், பிளாக்செயின் மற்றும் தானியங்கி பெர்த் மேலாண்மை, பணியாளர்களின் மறுதிறன் மேம்பாடு மற்றும் AI-க்கு இடையிலான ஒருங்கிணைப்பு, கொள்கை முடிவுகள் மற்றும் தரவுப் பாதுகாப்பில் AI-ன் பங்கு, மற்றும் இந்திய கடல்சார் துறையில் AI-க்கான ஒரு 'தேசிய சோதனைக்களமாக' வ.உ.சி துறைமுகத்தை முன்னிறுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் பிப்ரவரி 17 அன்று புது டெல்லி பாரத் மண்டபத்தில் "செயற்கை நுண்ணறிவால் இயங்கும் துறைமுகங்கள்" என்ற தலைப்பில் வ.உ.சி துறைமுகம் முக்கியக் கலந்துரையாடலை நடத்தவுள்ளது.



