• vilasalnews@gmail.com

மாநில அளவிலான கைப்பந்து போட்டி: சங்கரலிங்கபுரம் அணி முதலிடம் - முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் பரிசு வழங்கினார்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில், SLP ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.


இந்தத் தொடரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 26 அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றன. வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் மைதானம் முழுவதும் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இறுதிப் போட்டியை முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்தார்.


கடும் போட்டிக்குப் பிறகு வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் பரிசுத் தொகையையும், கோப்பைகளையும் வழங்கி கௌரவித்தார். 


இதில், முதலிடத்தை சங்கரலிங்கபுரம் SLP ஸ்போர்ட்ஸ் கிளப்பும்,  இரண்டாமிடத்தை தென்காசி மாவட்டம் நல்லூர் பாய்ஸ் அணியினரும், மூன்றாமிடத்தை சி.ஆர். காலனி ப்ளூ ஸ்டார் அணியும், நான்காமிடத்தை நாலாட்டின் புதூர் லயன்ஸ் கிளப் அணியும், ஐந்தாமிடத்தை சுரண்டை PSR கல்லூரி அணியும் தட்டிச் சென்றன.


இந்நிகழ்விற்கு, ஊர் நாட்டாமை மகாராஜன், சுப்பையா ஆகியோர் தலைமை தாங்கினர்.  ஆனந்தராஜ், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரலிங்கபுரம் திமுக கிளைச் செயலாளர்  சிவக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை நடராஜன், மாரிச்செல்வம்,  கவியரசன் மற்றும் சங்கரலிங்கபுரம் கிராம இளைஞர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

  • Share on

மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்தா? ஓட்டுநர் மீது பாயும் கொலை முயற்சி வழக்கு : தூத்துக்குடி போலீஸ் சபாஷ்!

தூத்துக்குடியில் பாலியல் வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் அதிரடி கைது!

  • Share on