கழுகுமலை காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆகிய இருவர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தென்காசியை சேர்ந்த ராஜேஷ் குமார் (25) மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த அருள் ஆனந்தம் (39) ஆகியோர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க கழுகுமலை மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி 2பேர் நேற்று போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.



