தூத்துக்குடி நகர், துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.7) நகரின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
110/22 கே.வி நகர் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, எட்டயாபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சத்திரம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம் இன்னாசியார் புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவிய புரம் முத்துகிருஷ்ணா புரம், சுந்தரவேல்புரம் அம்பேத்கார் நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர்,
வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 04:00மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர்/விநியோகம்/ நகர்/ தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது




