• vilasalnews@gmail.com

சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை... திருச்செந்தூர் நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு இன்று மற்றொரு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


கடந்த 2025 ஆம் ஆண்டு திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த காளியப்பன் (30) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.


மேலும், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி காளியப்பன் மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், மதுரை மத்தியசிறையில் அடைத்தனர்.


இந்நிலையில், மேற்படி திருச்செந்தூர் காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் போலீசார் அவரை நேற்று திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.மேற்படி வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி  சிதம்பரம்  நேற்று காளியப்பன் என்பவரை குற்றவாளி என தீர்ப்பளித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.


மேற்படி பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் போது அவரின்  மற்றொரு வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் இன்னோஷ்குமார் மற்றும் திருச்செந்தூர் காவல் நிலைய காவல்துறையினரையும், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  வனிதா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டினார்.


  • Share on

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது தெரியுமா மக்களே!

தூத்துக்குடி: சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் - கோரிக்கைகள் என்ன?

  • Share on