பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சரும் ஆன கீதாஜீவன் தலைமையில் ராஜாஜி பூங்காவில் இருந்து அமைதி பேரணியாக காமராஜர் மார்க்கெட் வழியாக வந்து ரவுண்டானாவில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இந்நிகவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.




