தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி கிராமத்தைச் சேர்ந்த வனராஜன் என்பவரது மகன் திருமணி (வயது 13) ஆறுமுகம் என்பவரது மகன் நரேன் ஸ்ரீ கார்த்திக் (வயது 12) மற்றும் கதிரேசன் என்பவரது மகன் முகேந்திரன் (வயது12) ஆகிய மூன்று சிறுவர்கள் நேற்று (26.01.2026) மாலை சுமார் 04.15 மணியளவில் மாப்பிள்ளையூரணி கிராமத்தில் உள்ள சிலுவைப்பட்டி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்தச் சம்பவத்தின் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



