• vilasalnews@gmail.com

திமுக தலைமையிடம் இருந்து வந்த அழைப்பு... மாவீரர் ஊமைத்துரைக்கு மணிமண்டபம் முதல் பாஞ்சையில் போர் நினைவுச்சின்னம் வரை!

  • Share on

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைக் கேட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகத் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலக்குழு நிர்வாகிகள் 5 அம்ச கோரிக்கைகளை அடங்கிய மனுவினை நேரில் வழங்கினர்.


தமிழக சட்டப்​பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக, மண்டலங்கள் தோறும் சென்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, கருத்துகளை தலைவரான கனிமொழி எம்.பி தலைமையிலான குழுவினர் கேட்டறிந்து வருகின்றனர்.


அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மண்டலத்தில் நடைபெறும் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது தரப்பு கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்குமாறு திமுக தலைமையிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று, இன்று ( ஜன.30 ) பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலக்குழு செயலாளர் ஆதிசங்கர் தலைமையிலான ஆலயக்குழு நிர்வாகிகள் கீழ்காணும் 5 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவினை குழுவின் தலைவர் கனிமொழி எம்பியிடம் நேரில் வழங்கினர்.


கோரிக்கைகள்:

1.ஊமைத்துரை மணிமண்டபம்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மாவீரன் ஊமைத்துரை அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், பாஞ்சாலங்குறிச்சியில் அவருடைய திருவுருவச் சிலையுடன் கூடிய பிரம்மாண்டமான மணிமண்டபம் அமைத்திட வேண்டும்.


2.போர் நினைவுச் சின்னம்

ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் நிகழ்ந்த வீரப்போர் மற்றும் தியாகங்களை இளைய தலைமுறை உணரும் வண்ணம், அங்கு ஒரு கம்பீரமான ‘போர் நினைவுச் சின்னம்' நிறுவிடவேண்டும்.


3.தூத்துக்குடியில் கட்டபொம்மன் சிலை

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு முழு உருவச் சிலை அமைத்திட வேண்டும்.


4.விமான நிலையப் பெயர்

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு, சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியான ‘மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன்' அவர்களின் பெயரைச் சூட்டி கௌரவிக்க வேண்டும்.


5.நவீன நூலகம்

பாஞ்சாலங்குறிச்சி பகுதி மாணவர்களின் கல்வி மற்றும் வரலாற்று அறிவை மேம்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய 'நவீன நூலகம்‘ ஒன்றை உருவாக்கிட வேண்டும்.

  • Share on

தூத்துக்குடி அருகே கடலில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி - குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

கெத்து காட்டி ரீல்ஸ் போடுபவர்களே... தூத்துக்குடி எஸ்.பி எச்சரிக்கை!

  • Share on